

இயக்குநர்ராஜமவுலியின் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘வாரணாசி’. இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில் உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாறன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது.
‘வாரணாசி’ படம், ‘இண்டியானா ஜோன்ஸ்’ போல உலக அளவிலான ஆக்ஷன் அட்வென்சர் படமாக இருக்கும் என்று ராஜமவுலி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதன் முக்கியமான காட்சிகள் காசியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபுவின் கேரக்டரை அனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு கென்ய காடுகளில் நடக்க இருப்பதாகவும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கென்யாவில் நடைபெற்றது. இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் 2027ம் ஆண்டு ஏப்ரல்7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.