

சென்னை,
சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சில யூடியூப் சேனலிலும் தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாக நடிகை மகிமா தெரிவித்துள்ளார். அதனை இவ்வளவு நாள் பொருத்திருந்ததாகவும் இனிமேல் அவ்வாறு நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறி இருக்கிறார்.
இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்திருந்தார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அதில், ''இதுவரை நான் அமைதியாக பொறுமையுடன் அதனை சகித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இனிமேல் அப்படி இருக்கப் போவதில்லை. நான் உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதில்லை. அதேபோல என்னுடைய விஷயங்களிலும் தலையிட வேண்டாம்.
ஒருவேளை இதை நீங்கள் மீறினால் நிச்சயமாக என் மீது அவதூறு கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இதுவே என் கடைசி எச்சரிக்கை'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
View this post on Instagram