

சென்னை,
தமிழில் சாட்டை படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகை மகிமா நம்பியார் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் நடிகர் ஸ்ரீ விஷ்ணுவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்டிஎக்ஸ் (2023), ஜெய் கணேஷ் (2024), லிட்டில் ஹார்ட்ஸ் (2024), மற்றும் பிரோமன்ஸ் (2025) போன்ற மலையாள படங்களில் நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்ற மகிமா நம்பியார் , தமிழில் சாட்டை, என்னமோ நடக்குது, குற்றம் 23, மகாமுனி, அசுர குரு, ஓ மை டாக், ஐங்கரன், 800, ரத்தம், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இப்போது அவர் தெலுங்கிலும் கால் பதிக்க உள்ளதாக தெரிகிறது. ஜானகிராம் மாரெல்லா இயக்க உள்ளதாக கூறப்படும் இப்படத்தின் பெயர் அக்டோபர் 2 -ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram