சூர்யாவின் 42 வது- படம் குறித்த முக்கிய அப்டேட்...!

நடிகர் சூர்யா குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் விவரம் வருமாறு:-
சூர்யாவின் 42 வது- படம் குறித்த முக்கிய அப்டேட்...!
Published on

சென்னை

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் படங்களில் நடிகர் சூர்யா அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படக்குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

இப்படத்தில் சூர்யா பல வில்லன் கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அவர் எத்தனை வேடங்களில் நடிக்கிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இப்படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் நடிகை திஷா பதானியும் நடிக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் விவரம் வருமாறு:-

* இந்த படத்தில் நடிகர் சூர்யா 13 வேடங்களில் நடிப்பார் என்று கூறப்பட்டது, ஆனால் தற்போதைய தகவல்களின்படி, அவர் ஐந்து அல்லது ஆறு வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளது.

* முதல் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்தது.

* அடுத்த கேரக்டர் போர்ஷன் மற்றும் பீரியட் போர்ஷன் அடுத்த வாரம் படமாக்கப்படும்.

* இன்னும் பல காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால், பீரியட் போர்ஷன் முடிந்து அடுத்த கதாபாத்திரங்களை விரைவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

* ஒவ்வொரு கேரக்டருக்குm ஒரு சிறப்பு காட்சி இருப்பதாக கூறப்படுகிறது, இது ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படும். விமான சண்டை" படத்தின் ஹை லைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

* சூர்யா 42 படத்தின் புரோமோ ஷூட் முடிந்து விட்டது.இப்படத்தின் தலைப்பு மற்றும் புரோமோ வீடியோவை விரைவில் வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

* சூர்யா நிறைய வில்லன்கள் கேரக்டரில் நடித்து வருவதால் இது பெரிய படமாக உருவாகவுள்ளது. எனவே படத்தை பொன்னியின் செல்வன் பாணியில் இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

* பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com