“மகரம்” படம் ஹாலிவுட் அனுபவத்​தை தரும் - அகஸ்​டின் பிரபு

விரைவில் திரைக்கு வரவுள்ள ‘மகரம்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.
“மகரம்” படம்  ஹாலிவுட் அனுபவத்​தை தரும் -  அகஸ்​டின் பிரபு
Published on

முழு​மை​யான சயின்ஸ் பிக்‌ஷன் கதை​யுடன் உரு​வாகி​யுள்ள திரைப்​படம், ‘மகரம்’. அகஸ்​டின் பிரபு இயக்​கி​யுள்ள இப்​படத்தை ராக்ஸ் நேச்​சர் என்​டர்​டெ​யின்​மென்ட் தயாரித்​துள்​ளது. ஆதர்ஷ் சந்​திர சேகரன் இசை அமைத்​துள்​ளார். அமல் டோமி ஒளிப்​ப​திவு செய்துள்​ளார். அஜித், இஷி​தா, அமர் ரமேஷ், நிர்​மல், சாமி, அசோக் குமார் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

இயக்​குநர் அகஸ்​டின் பிரபு கூறும்​போது, “4 கதைகளை ஒன்றோடொன்று இணைத்து ஒரு சினி​மாட்​டிக் யூனிவர்ஸ் உருவாக்​கும் கனவு எனக்​கிருந்​தது. பெரிய தயாரிப்​பாளர்கள் செய்​யாததைச் சிறிய டீமாக முயற்சி செய்ய வேண்​டும் என்ற எண்​ணம். ஒரு நல்ல ஐடியா வந்​தால் அதை உடனே செயல்​படுத்த வேண்​டும் என்​பதே எங்​கள் நம்​பிக்​கை. அதிலிருந்தே ‘மகரம்’ உருவானது.ராமேஸ்​வரம், தூத்​துக்​குடி உள்​ளிட்ட கடல் பகு​தி​களில் படமாக்கினோம். கிட்​டத்​தட்ட 70 சதவி​கித காட்​சிகள் கடலுக்​குள் எடுக்​கப்​பட்​டது. அது மிகப்​பெரிய ரிஸ்க். இருந்​தா​லும் தரத்​தில் சலுகை செய்​ய​வில்​லை. இது ஒரு ஹாலிவுட் பட அனுபவத்​தைத் தரும்” என்​றார்.

இந்தப் படத்தில் 700 விபிஎக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com