ராம் சரண் நடிக்கும் 'ஆர்.சி.16' படத்தில் கிரிக்கெட் காட்சிகள்


Makers confirm Cricket scenes in Ram Charan starrer RC16
x

ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் கிரிக்கெட் காட்சிகள் இருப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. அதன்படி, அதற்கான படப்பிடிப்பில் இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இதனை தெரிவித்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, ராம் சரண் இப்படத்தில் ஒரு பாடலை பாட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அவ்வாறு ராம் சரண் பாடினால் அது படத்திற்கு மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும்.

1 More update

Next Story