படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்ட 'சூர்யாவின் சனிக்கிழமை' படக்குழு

'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Makers share exciting BTS clip of building the 'Saripodhaa Sanivaaram' world ahead of release
Published on

சென்னை,

நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான 'அந்தே சுந்தரானிகி' படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா மீண்டும் நானியுடன் இணைந்துள்ளார். நானிக்கு ஜோடியாக இப்படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்திற்கு தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இந்தப்படம் பான் இந்திய படமாக இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அதன்படி இப்படம் வரும் 29 -ந் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், தற்போது படத்திற்கான புரொமோசன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் படக்குழுவினர், படத்தின் படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர். படப்பிடிப்பின்போது ஏற்படும் உரையாடல்கள் மற்றும் படத்தின் பல்வேறு அம்சங்களை பற்றி கூறும் வீடியோவாக இது அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com