''குடும்ப படம் எடுப்பது ரொம்ப கஷ்டம், கொஞ்சம் விட்டாலும்...'' - இயக்குனர் பாண்டிராஜ்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தலைவன் தலைவி'
சென்னை,
தலைவன் தலைவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ், குடும்ப படம் எடுப்பது ரொம்ப சவாலானது என்று கூறினார். அவர் கூறுகையில்,
''குடும்ப படம் என்றாலே சீரியல், கிரிஞ் என்று சொல்லி விடுவார்கள். கொஞ்சம் விட்டாலும் அது சீரியலாக மாறிவிடும் அது உண்மைதான். ரொம்ப சவாலானது. ஒரு குடும்ப படம் எடுப்பதுதான் ரொம்ப கஷ்டம்.
தற்போது ''லப்பர் பந்து'', ''குடும்பஸ்தன்'', ''டூரிஸ்ட் பேமிலி'', ''மாமன்'' போன்ற குடும்ப படங்களை மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னை அணுகும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எல்லோருமே குடும்ப கதைகளைதான் எதிர்பார்க்கிறார்கள். நிராகரிப்பது இல்லை.
கடைகுட்டி சிங்கம் ஓடின உடன் , சிவகார்த்திகேயன் இப்படி ஒரு படம் எனக்கு பண்ணுங்கள் என்று கேட்டார் , அப்படி வந்ததுதான் நம்ம வீட்டு பிள்ளை. இப்போது தலைவன் தலைவி ஓடியது என்றால், ஹீரோக்கள் இப்படி ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்பார்கள். ''தலைவன் தலைவி'' எல்லோருக்குமான படமாக இருக்கும்''என்றார்.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தலைவன் தலைவி'. இப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது.






