'கள்வன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கள்வன்'.
'கள்வன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
Published on

சென்னை,

பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கள்வன்'. இந்த படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டில்லி பாபு தயாரித்த இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

கடந்த 4-ந்தேதி வெளியான 'கள்வன்' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com