'குமாரசம்பவம்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

பீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள 'குமாரசம்பவம்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை,
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகனாக ‘குமாரசம்பவம்’ படம் மூலம் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். கடந்த 12ந் தேதி வெளியான இந்த படம் பீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். வீனஸ் இன்பொடெயின்மெண்ட் நிறுவனம தயாரித்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், குமாரசம்பவம் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story






