'விடுதலை' படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ - இணையத்தில் வைரல்

வெற்றிமாறன் இயக்கியுள்ள 'விடுதலை' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
'விடுதலை' படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ - இணையத்தில் வைரல்
Published on

சென்னை,

வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

'விடுதலை' திரைப்படம் வருகிற மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com