"முதல் படம் எடுப்பது சவாலான விஷயம்"- இயக்குநர் ராஜவேல்

தர்ஷன் நடித்துள்ள 'ஹவுஸ் மேட்ஸ்' பேண்டஸி ஹாரர் காமெடி படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குநர் ராஜவேல் எழுதி இயக்கியுள்ள படம் 'ஹவுஸ் மேட்ஸ்'. பேண்டஸி ஹாரர் காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் நாயகனா தர்ஷன் நடித்திருக்கிறார் . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியின் போது இயக்குநர் ராஜவேல் பேசும்போது, "முதல் படம் எடுப்பது சவாலான விஷயம். எடுத்த படத்தை வெளியிடுவது அதைவிட சவாலான விஷயமாகும். அதை எஸ்கே புரொடக்க்ஷன் எளிமையாக செய்து கொடுத்தது. சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. தர்ஷன், காளி வெங்கட், வினோதினி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சின்ன சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது. படம் பார்க்கும்போது தெரியும்" என்று பேசினார்.






