ராஷ்மிகாவின் ஹாரர் படத்தில் மேலும் 2 கதாநாயகிகள்...?

மேடாக் பிலிம்ஸின் தினேஷ் விஜன் தயாரிக்கும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கும் பாலிவுட் ஹாரர் படமான ''தாமா''.
இந்த படம் ஸ்ட்ரீ யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், சமீபத்திய தகவலின்படி, இந்த படத்தில் மலைக்கா அரோரா மற்றும் நோரா பதேகி சிறப்புப் பாடல்களில் நடனமாடி உள்ளதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு மலைக்காவும், இந்த வார தொடக்கத்தில் நோராவும் அதற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தெரிகிறது. நோரா இடம் பெற்ற பாடல் படத்தின் இறுதியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேடாக் பிலிம்ஸின் தினேஷ் விஜன் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
Related Tags :
Next Story






