'சர்தார் 2 ' படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகை

‘சர்தார் 2 ’ படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
'சர்தார் 2 ' படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகை
Published on

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கினார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 'சர்தார் 2' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிகைகள் பிரியங்கா மோகன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் இப்படத்தில் இணைந்துள்ளதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

View this post on Instagram

நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானவர். இவர் தங்கலான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com