மோகன்லாலின் 'ஹிருதயபூர்வம்' படத்தில் இணைந்த மாளவிகா மோகனன்


மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன்
x
தினத்தந்தி 22 Feb 2025 9:42 PM IST (Updated: 18 July 2025 11:06 AM IST)
t-max-icont-min-icon

மோகன்லால் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது.

சென்னை,

நடிகை மாளவிகா மோகனன் பல மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார். விரைவில் பிரபாசின் 'தி ராஜா சாப்' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். இப்படம் இந்தாண்டு மத்தியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் கார்த்தியுடன் சர்தார் 2 படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் 'ஹிருதயபூர்வம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சங்கீதா, சித்திக், சங்கீத் பிரதாப், நிஷான், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அகில் சத்யன் வசனம் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் 'ஹிருதயபூர்வம்' படத்தில் இணைந்துள்ளார். இன்று நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை மாளவிகா மோகனன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். மாளவிகா மோகனன் நடிகர் மோகன்லாலின் படத்தில் கதாநாயகியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

1 More update

Next Story