பிரபாஸின் இந்த ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட மாளவிகா மோகனன்


Malavika Mohanan missed out on the chance to act in Prabhas film
x

சலார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த 'மாறன்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த சலார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'நான் ஒரு பெரிய பாகுபலி ரசிகை, பாகுபலி 1 மற்றும் 2 எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்போதிருந்து பிரபாஸுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கு சலார் படம் மூலம் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை' என்றார்.

சலார் படத்தை மாளவிகா மோகனன் தவறவிட்டிருந்தாலும் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story