‘லோகா’போல படம் எடுக்க தயாரிப்பாளர்கள் துணிவதில்லை - மாளவிகா மோகனன்

’லோகா’ படம் பற்றி மாளவிகா மோகனன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
பட்டம் போலே' என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்,மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'தி ராஜா சாப்' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஒரு நேர்காணலில் லோகா படம் பற்றி மாளவிகா மோகனன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், "மலையாளத் திரைப்படத் துறையில் ’லோகா’ ஒரு பெரிய பட்ஜெட் படம். இதில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது. அதன் தயாரிப்பாளர்கள் துணிந்து கல்யாணி மீது நம்பிக்கை வைத்ததால் இது நடந்தது.
ஆனால், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இதுபோன்ற பெரிய பட்ஜெட் படங்களில் ஒரு பெண்ணை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கத் துணிவதில்லை. இதுபோன்ற படங்களில் ஆண்களே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்," என்றார்.
மாளவிகா மோகனன் தற்போது தமிழில் 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார்.






