மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை திருமணம் செய்யும் டாடா பட நடிகை

மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலை அபர்ணா தாஸ் திருமணம் செய்ய இருக்கிறார்.
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை திருமணம் செய்யும் டாடா பட நடிகை
Published on

திருவனந்தபுரம்,

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அபர்ணா தாஸ். இவர் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் அபர்ணா தாஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான 'டாடா' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார். படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், அபர்ணா தாஸ் திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலை அபர்ணா தாஸ் திருமணம் செய்ய இருக்கிறார். இது குறித்தான புகைப்படத்தை தீபக் பரம்போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களது திருமணம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளதாக அவர் பகிர்ந்த புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இருவரும் மனோகரம் என்ற மலையாள படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com