'மலையாள சினிமாவுக்கு நான் தேவையில்லை' - ஹனி ரோஸ்


Malayalam cinema doesnt need me: Honey Rose
x
தினத்தந்தி 17 Nov 2025 9:30 PM IST (Updated: 17 Nov 2025 9:30 PM IST)
t-max-icont-min-icon

ஹனி ரோஸ் நடித்துள்ள 'ரேச்சல்' படம் டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

சென்னை,

ஹனி ரோஸ் தற்போது 'ரேச்சல்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆனந்தினி பாலா இயக்குநராக அறிமுகமாகும் இத்திரைப்படத்தில், ராதிகா ராதாகிருஷ்ணன், பாபுராஜ், சந்து சலீம்குமார், ஜாபர் இடுக்கி, வினீத் தட்டில் மற்றும் ரோஷன் பஷீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

'ரேச்சல்' டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய ஹனி ரோஸ் மலையாள சினிமாவுக்கு தான் தேவையில்லை என்றார்.

அவர் பேசுகையில், ‘மலையாள சினிமாவுக்கு நான் தேவையா என்று நீங்கள் என்னிடம் கேட்டால், பதில் இல்லை என்பதுதான்’என்றார்.

நடிகை ஹனி ரோஸ் கடந்த 2005ம் ஆண்டு வெளியான 14 வயதில் பாய் பிரண்ட் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பலவேறு படங்களில் நடித்து உள்ளார்.

தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஹனி ரோஸுக்கு சினிமாவில் பெரியளவில் அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், அவரின் கவர்ச்சியால் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். பல வணிக நிறுவனங்கள், கடைகள் திறப்புவிழாவில் கலந்து கொள்கிறார்.

1 More update

Next Story