மலையாள திரைப்பட உதவி ஒளிப்பதிவாளர் மர்மச்சாவு

ஒளிப்பதிவாளர் ஜாபர் கழிப்பறையில் மர்மமாக இறந்து கிடந்தார்.

மலையாள திரைப்பட உதவி ஒளிப்பதிவாளர் மர்மச்சாவு
Published on

திருச்சூர்,

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் (வயது 51). இவர் மலையாள திரைப்பட உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் சினிமா படப்பிடிப்புக்காக வந்த திரைப்பட குழுவினர் திருச்சூர் அருகே கொடுங்கல்லூர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

இந்த குழுவில் இருந்த ஜாபர் கழிப்பறைக்கு சென்று வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. பின்னர் குழுவினர் சென்று பார்த்த போது, ஜாபர் மர்மமாக இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கொடுங்கல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com