சாதனை படைத்த அனஸ்வராவின் 'ரேகா சித்திரம்'

நடிகை அனஸ்வரா நடிப்பில் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியான திரைப்படம் 'ரேகா சித்திரம்'.
திருவனந்தபுரம்,
நடிகர் ஆசிப் அலி நடிப்பில் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியான திரைப்படம் 'ரேகா சித்திரம்' 'கிஷ்கிந்தா காண்டம்' படத்துக்கு அடுத்ததாக ஆசிப் அலி நடித்த திரில்லர் படமாக இது அமைந்தது. மம்முட்டி நடித்த 'தி ப்ரீஸ்ட்' படத்தின் மூலம் பிரபலமான ஜோபின் டி சாக்கோ இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்தப் படத்தில் அனஸ்வரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன், இந்திரன்ஸ், நிஷாந்த் சாகர், ஜரின் ஷிஹாப், சித்திக் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் வெறும் 6 முதல் 9 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வெளியாகி 25 நாட்களில் ரூ. 75 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மலையாளப் படங்களில் ஒன்றாக 'ரேகா சித்திரம்' உருவெடுத்துள்ளது.
Related Tags :
Next Story






