கமல்ஹாசனின் 237-வது படத்தில் இணைந்த மலையாள திரைக்கதை ஆசிரியர்!

கமல் தனது 237-வது படத்தில் பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
கமல்ஹாசனின் 237-வது படத்தில் இணைந்த மலையாள திரைக்கதை ஆசிரியர்!
Published on

சென்னை,

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் கடந்த ஜூன் மாத தக் லைப் படம் வெளியானது. மணிரத்னம் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனை தொடர்ந்து கமல் பா.ரஞ்சித் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் கமல் தனது 237-வது படத்தில் பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவர்கள் 'மெட்ராஸ்' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்களது கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தற்காலிகமாக கேஎச் 237 (KH237) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.

இந்தநிலையில், கமலின் 237-வது படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, கேஎச் 237 படத்தில் தேசிய விருது வென்ற திரைக் கதை ஆசிரியர் ஸ்யாம் புஷ்கரன் இணைந்துள்ளார். இவர் கும்பலாங்கி நைட்ஸ், ஜோஜி, மஹேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட பல மலையாளப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com