எளிமையாக திருமணம் செய்த நட்சத்திர பாடகி...வைரலாகும் புகைப்படங்கள்

அவர்களுக்கு திரைப்பட பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
மலையாள நட்சத்திர பாடகி ஆர்யா தயாள் பற்றி பலருக்குத் தெரியாது. ஆனால் இசை ஆர்வலர்களுக்கு அவரது பெயர் நன்கு தெரிந்திருக்கும். மலையாளத்தில் தனது மேடை நிகழ்ச்சிகள் மற்றும் இசைக்குழு மூலம் மிகவும் பிரபலமான ஆர்யா தயாளுக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இதற்கிடையில், ஆர்யா தயாள் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். தன் காதலனை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அபிஷேக் என்பவரை எளிமையாக பதிவுத் திருமணம் செய்து கொண்ட ஆர்யா தயாள், தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். தற்போது, இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அவர்களுக்கு திரைப்பட பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






