சரியாக வீட்டு வாடகை தராததால் வெளியேற்றம்:நடிகை மல்லிகா ஷெராவத் மறுப்பு

பாரீஸில் தங்கியிருக்கும் வீட்டிற்கு வாடகை தராததால் மல்லிகா ஷெராவத் வெளியேற்றப்பட்டார் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சரியாக வீட்டு வாடகை தராததால் வெளியேற்றம்:நடிகை மல்லிகா ஷெராவத் மறுப்பு
Published on

புதுடெல்லி,

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். தமிழில் சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடியதுடன், கமலின் தசாவதாரம் படத்திலும் நடித்திருந்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள குடியிருப்பு ஒன்றில் காதலன் செரில் அக்ஸன்ஃபேன்னுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சரியாக வீட்டு வாடகை கொடுக்காததால் அவர் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற தகவல்கள் வெளியானது. இது குறித்து மல்லிகா ஷெராவத் மறுப்பு தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இது தொடர்பாக மல்லிகா ஷெராவத் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

சில பத்திரிக்கைகளில் வீட்டு வாடகை பணம் செலுத்தாததால் என்னை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் உண்மை இல்லை. யாரோ ஒருவர் எனக்கு நன்கொடை அளித்தால், தயவு செய்து என் முகவரிக்கு அனுப்பவும். என பதிவிட்டுள்ளார்.

மல்லிகா ஷெராவத் தொடர்ந்து கேன்ஸ் பட விழாவில் கலந்துகொள்கிறார். ஜீனத் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் வரும் 2018-ம் ஆண்டு வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com