'மாமன்னன்' படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானது..!

'மாமன்னன்' திரைப்படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகி உள்ளது.
'மாமன்னன்' படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானது..!
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com