மம்தா மோகன்தாஸ் சரும நோயால் அவதி

சருமம் சம்பந்தப்பட்ட வியாதியால் அவதிப்படுவதாக மம்தா மோகன்தாஸ் தெரிவித்து உள்ளார்.
மம்தா மோகன்தாஸ் சரும நோயால் அவதி
Published on

தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மம்தா மோகன்தாஸ் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பில் சிக்கி சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். தற்போது சருமம் சம்பந்தப்பட்ட வியாதியால் அவதிப்படுவதாக மம்தா மோகன்தாஸ் தெரிவித்து உள்ளார்.

இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சருமத்தின் மீது மச்சங்கள் ஏற்படும். உடலின் நிறம் மாறிவிடும். நாட்கள் ஆக ஆக சிறிய மச்சங்கள் பெரிதாகி கொண்டே செல்லும்.

மம்தா மோகன்தாஸ் வலைத்தளத்தில் சரும பாதிப்பு குறித்து தெரிவித்ததோடு சூரிய பகவானுக்கு வேண்டுகோள் விடுத்து உருக்கமான பதிவு வெளியிட்டு உள்ளார். அதில், ''பிரியமான சூரிய பகவானே, என் சருமம் வண்ணத்தை இழந்து கொண்டிருக்கிறது. எனவே நான் உன் முன் வந்திருக்கிறேன். நீ வருவதற்கு முன்பே உனக்காக விழித்து எழுந்து உன் வெதுவெதுப்பான ஒளியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உன் சக்தியை எனக்கு கொடு. நான் உனக்கு கடன்பட்டு இருப்பேன். இதற்கு மேல் எப்போதும் உன் மீது கருணையோடு இருப்பேன்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com