“எல்லம்மா” படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் ஜோடியாகும் மமிதா பைஜு

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
Devi Sri Prasad
Published on

தெலுங்கு, தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழில் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், ஆறு, சிங்கம், புலி, வில்லு, வீரம், கங்குவா என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் வெற்றிக்கு இவரது பாடல்களும் முக்கிய காரணம்.

இயக்குநர் வேணு எலிடாண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தில் கதாநாயனாக தேவி ஸ்ரீ பிரசாத் அறிமுகமாகிறார். இப்படத்தை தெலுங்கில் வரவேற்பை பெற்ற ‘பல​காம்’ என்ற படத்தை இயக்கிய வேணு எல்​டண்​டாடி இயக்​கு​கிறார்.

‘எல்லம்மா’ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இப்படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Yellamma

ஸ்ரீவெங்​கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் தயாரிக்​கின்​றனர். இதில் பார்சி என்ற கதா​பாத்​திரத்​தில் தேவி ஸ்ரீ பிர​சாத் நடிக்​கிறார். இப்​படம் தெலுங்​கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் உரு​வாகிறது. இதில் சாய் பல்​லவி, மிருணாள் தாக்குர்​ அல்​லது கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரில் ஒரு​வர் கதா​நாயகி​யாக நடிப்​பார்​கள் என்று முதலில் கூறப்​பட்​டது.

இந்நிலையில், ‘எல்லம்மா’ படத்தில் தேவி ஸ்ரீ பிர​சாத் ஜோடியாக மமிதா பைஜு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மமிதா பைஜு ‘டியூட்’ நடித்திருந்தார். மேலும், இவரது நடிப்பில் விஜய்யின் ‘ஜனநாயகன்’, சூர்யாவின் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com