மமிதா பைஜு பிறந்தநாள்- சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “இரண்டு வானம்” படக்குழு

நடிகை மமிதா பைஜுவின் பிறந்தநாளையொட்டி ‘இரண்டு வானம்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
மமிதா பைஜு பிறந்தநாள்- சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “இரண்டு வானம்” படக்குழு
Published on

மலையாளத்தில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்த ‘பிரேமலு’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொத்தாக அள்ளிய இளம் கதாநாயகி மமிதா பைஜு. இவர் டியூட், ஜனநாயகன், கர படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.. தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பிசியாக படங்கள் நடித்து வருகிறார். சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.‘இரண்டு வானம்’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

விஜய்யின் ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் உற்சாகமாக நடனமாடிய மமிதா பைஜு , ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் இடம்பெற்ற ‘எல்லா புகழும் ஒருவனுக்கே...’ பாடலின் சில வரிகளைப் பாடினார். அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி, ட்ரோல் செய்யப்பட்டது.

ராம் குமார் இயக்கத்தில் 3-வது முறையாக விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘இரண்டு வானம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வரும் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் நிறைவடைந்து. தற்போது படத்தின் வெளியீட்டிற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை கோடை காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ‘இரண்டு வானம்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மமிதா பைஜு வாழ்த்தியுள்ளது. ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படக்குழுவும் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மமிதா பைஜு வாழ்த்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com