சங்கீத் பிரதாப்புக்கு ஜோடியாகும் மமிதா பைஜு


Mamitha Baiju and Sangeeth Prathap to lead Dinoy Pauloses directorial debut
x
தினத்தந்தி 28 Jun 2025 12:30 PM IST (Updated: 28 Jun 2025 12:30 PM IST)
t-max-icont-min-icon

"பிரேமலு" திரைப்படத்தில் நடித்த சங்கீத் பிரதாப், இப்படத்தில் மமிதா பைஜுவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சென்னை,

"பிரேமலு" திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த சங்கீத் பிரதாப், இப்படத்தில் மமிதா பைஜுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். எழுத்தாளரும் நடிகருமான டினோய் பவுலோஸ் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் மமிதா பைஜு மற்றும் சங்கீத் பிரதாப் இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட இயக்குனர் டினோய், 2019-ம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஆன ''தண்ணீர் மதன் தினங்கள்'' படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றி பிரபலமானார். அதில் அவர் ஒரு துணை வேடத்திலும் நடித்திருந்தார்.

பின்னர் அவர், ''பத்ரோசிண்டே படப்புகள்'' மற்றும் விசுதா மேஜோ படங்களில் கதை எழுதி கதாநாயகனாக நடித்தார்.

1 More update

Next Story