

மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, ‘பிரேமலு’ படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் மமிதா பைஜு . தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் ‘டியூட்’ படத்தில் நடித்தவர், தற்போது நடிகர் விஜய்யின்‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மமிதா பைஜூ நடித்திருக்கும் ‘ஜன நாயகன்’, ‘கர’',‘சூர்யா 46’, ‘இரண்டு வானம்’ ஆகிய திரைப்படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் உற்சாகமாக நடனமாடிய மமிதா பைஜு , ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் இடம்பெற்ற ‘எல்லா புகழும் ஒருவனுக்கே...’ பாடலின் சில வரிகளைப் பாடினார். அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி, ட்ரோல் செய்யப்பட்டது.
தன்னைப் பற்றிய விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்கள் குறித்து மமிதாவிடம் கேட்கப்பட்டபோது, அவர் “சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற கிண்டல்களை நான் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. இதையெல்லாம் ஜாலியாக எடுத்துக்கொண்டு கடந்து செல்ல வேண்டியதுதான்” என்று தெரிவித்துள்ளார்.