அடுத்த படத்தை அறிவித்த மம்முட்டி

அடுத்ததாக மம்முட்டி நடிக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Mammootty announces next film
Published on

சென்னை,

கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் கடந்த மாதம் 23-ம் தேதி வெளியான படம் 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்'. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

இன்னொரு பக்கம் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லாலுடன் இணைந்து ஏற்கனவே ஒரு படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். கிட்டத்தட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக மம்முட்டி நடிக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, இந்த படத்தை நிதிஷ் சகாதேவ் இயக்குகிறார். இவர் கடந்த 2023ல் பஷில் ஜோசப் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற பாலிமி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com