அமெரிக்கா - ஈரான் போரில் மக்கள் உயிர்கள் பறிபோவது வருத்தமளிக்கிறது - மம்முட்டி

போர் எதற்கும் தீர்வாகாது. ஆனால், மனிதம் வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம் என்று நடிகர் மம்முட்டி கூறியுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் போரில் மக்கள் உயிர்கள் பறிபோவது வருத்தமளிக்கிறது - மம்முட்டி
Published on

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதற்கிடையில் பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. அதே சமயம், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் நிகழ்ச்சியில் இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து கருத்து கூறியுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்கு தெரியாது. போர் எதற்கும் தீர்வாகாது. ஆனால், மனிதம் வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவது வருத்தமளிக்கிறது என்று நடிகர் மம்முட்டி கவலை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com