மம்முட்டி - மோகன்லால் நடிக்கும் “பேட்ரியாட்” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘பேட்ரியாட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மம்முட்டி - மோகன்லால் நடிக்கும் “பேட்ரியாட்” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘பேட்ரியாட்’ . மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நீண்டகாலத்திற்குப் பிறகு மலையாள சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ‘பேட்ரியாட்’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com