மம்முட்டி - மோகன்லால் நடிக்கும் “பேட்ரியாட்” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ படம் மே 1ந் தேதி வெளியாகிறது.
மம்முட்டி - மோகன்லால் நடிக்கும் “பேட்ரியாட்” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்
Published on

மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘பேட்ரியாட்’ . மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நீண்டகாலத்திற்குப் பிறகு மலையாள சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படத்தினை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, இப்படம் வருகிற ஏப்ரல் 23ந் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது. ஆனால் சமீபத்தில் இந்தபடம் மே 1ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஆக்சன் திரில்லர் வகை திரைப்படமான இதன் டிரெய்லர் காட்சிகள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. மம்முட்டி மற்றும் மோகன்லாலின் சண்டைக் காட்சிகள் நேர்த்தியாக எடிட் செய்யப்பட்டுள்ளது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில், ‘பேட்ரியாட்’ படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com