தமிழிலும் வெளியாகும் மம்முட்டியின் 'பிரமயுகம்' திரைப்படம்..!

மம்முட்டி நடித்துள்ள ‘பிரமயுகம்’ படமும் மலையாள மொழியில் மட்டுமன்றி தமிழிலும் வெளியாக இருக்கிறது.
தமிழிலும் வெளியாகும் மம்முட்டியின் 'பிரமயுகம்' திரைப்படம்..!
Published on

இந்தி, தெலுங்கு, மலையாள திரையுலகில் இருக்கும் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் தமிழ் மொழியிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த வரிசையில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்துள்ள 'பிரமயுகம்' படமும் மலையாள மொழியில் மட்டுமன்றி தமிழிலும் வெளியாக இருக்கிறது. மேலும் பல மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படத்தில் வரும் மம்முட்டியின் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தை ராகுல் சதாசிவன் டைரக்டு செய்துள்ளார். இதில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சக்கரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் எஸ்.சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

மம்முட்டியின் சமீபத்திய வெளியீடான கண்ணூர் ஸ்க்வாட் வெற்றி பெற்றதால் இந்தப்படத்துக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com