மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் மம்தா

தற்போது விஜய்சேதுபதியுடன் மகாராஜா படத்தில் மம்தா நடித்து இருக்கிறார்
Mamta is again acting in a Tamil film
image courtecy:instagram@mamtamohan
Published on

சென்னை,

தமிழில் 2006-ல் சிவப்பதிகாரம் படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமான பிரபல மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ் தொடர்ந்து குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

கடைசியாக 3 வருடங்களுக்கு முன்பு வெளியான எனிமி படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய்சேதுபதியுடன் மகாராஜா படத்தில் நடித்து இருக்கிறார்.

மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது குறித்து மம்தா மோகன்தாஸ் கூறும்போது, "மலையாளத்தில் அதிக படங்களில் நான் நடித்துக்கொண்டு இருந்ததால் தமிழ் படங்களில் சமீப காலமாக நான் நடிக்கவில்லை. உடல்நிலையும் சரியில்லாமல் இருந்தது.

தற்போது நிதிலன் இயக்கும் மகாராஜா படத்தில் எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சஸ்பென்ஸ், திரில்லர் கதையம்சத்தில் உருவாகி உள்ளது.

என்னிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. உதவி இயக்குனராக பணியாற்றவும் ஆர்வம் இருக்கிறது. அருள்நிதியுடனும் ஒரு படத்தில் நடிக்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com