'செவ்வாய்க்கிழமை 2' - பாயல் ராஜ்புட் வெளியேற்றம்... புதிய கதாநாயகியை தேடும் இயக்குனர்?


Managalavaaram 2 in talks without Payal Rajput
x

அஜய் பூபதி எழுதி இயக்கிய திகில் திரைப்படம் 'செவ்வாய்க்கிழமை'.

சென்னை,

கடந்த 2023-ம் ஆண்டு அஜய் பூபதி எழுதி இயக்கிய திகில் திரைப்படம் 'செவ்வாய்க்கிழமை'.இது கன்னடத்தில் மங்களவாரம் என்றும், இந்தியில் மங்களவார் என்றும், தமிழில் செவ்வாய்கிழமை என்றும், மலையாளத்தில் சோவ்வாழ்ச்ச என்ற பெயரிலும் வெளியானது.

இதில், நடிகை பாயல் ராஜ்புட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், செய்வாய்க்கிழமை பட இயக்குனர் அதன் 2-ம் பாகத்திற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், பாயல் ராஜ்புட்டுக்கு பதிலாக புதிய கதாநாயகியை இயக்குனர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாயல் ராஜ்புட் தற்போது 'வெங்கடலட்சுமி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முனி எழுதி, இயக்கி, திரைக்கதையும் அமைத்துள்ளார்.

1 More update

Next Story