''என் கனவு நனவானது''...நடிகை லட்சுமி மஞ்சுவின் உணர்ச்சிபூர்வ பதிவு

மஞ்சு லட்சுமி சமீபத்தில் ''தக்சா'' படத்தில் நடித்திருந்தார்.
Manchu lakshmi shares emotional note about latest movie dasksha
Published on

சென்னை,

மோகன் பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு சமீபத்தில் ''தக்சா'' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை வம்சி கிருஷ்ண மல்லா இயக்கியுள்ளார். ஸ்ரீ லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் மற்றும் மஞ்சு என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த படம் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் மோகன் பாபுவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வரும்நிலையில், லட்சுமி மஞ்சு ஒரு உணர்ச்சிபூர்வ பதிவை வெளியிட்டுள்ளார். படத்தில் தனது தந்தையுடன் இருந்த தருணங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அதனுடன்,''தக்சா' படத்தில் உங்களுடன் (மோகன்பாபு) நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக பெருமைப்படுகிறேன். இந்த படத்தின் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் என் மீது இருக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார். தற்போது, இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com