ரீ-ரிலீஸாகும் மணிரத்னத்தின் “இதயத்தை திருடாதே” திரைப்படம்

‘இதயத்தை திருடாதே’ படம் , மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜுனா நடித்த ‘கீதாஞ்சலி’ தெலுங்கு படத்தின் டப்பிங் படமாகும்
ரீ-ரிலீஸாகும் மணிரத்னத்தின் “இதயத்தை திருடாதே” திரைப்படம்
Published on

மணிரத்னம் இயக்கிய ‘இதயத்தை திருடாதே’ படம் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.

மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் சிறப்பான கவனத்தைப் பெற்ற திரைப்படம் ‘இதயத்தை திருடாதே’. நடிகர்கள் நாகர்ஜுனா, கிரிஜா ஷெட்டர் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் முழுமையான காதல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இது நாகார்ஜுனாவின் ‘கீதாஞ்சலி’ தெலுங்கு படத்தின் டப்பிங் படமாகும். இத்திரைப்படம் தேசிய விருதையும், நந்தி விருதுகளையும் பெற்றுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குறுகிய காலமே உயிர்வாழப் போகும் ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கும் அழகான உணர்வுபூர்வமான கதையை இத்திரைப்படம் பேசுகிறது. இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. முக்கியமாக, ஓ பிரியா பிரியா, ஓ பாப்பா லாலி பாடல்கள் இன்று வரை கேட்கப்படும் பாடல்களில் ஒன்றாகவும் இருக்கின்றன. பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் படமாக்கப்பட்ட காதல் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்திருந்தன.

இந்த நிலையில், 37 ஆண்டுகள் கழித்து ‘இதயத்தை திருடாதே’ படம் தொழில்நுட்ப மெருகேற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com