"மனிதர்கள்" படத்தின் டிரெய்லர் வெளியீடு


தினத்தந்தி 11 May 2025 11:48 PM IST (Updated: 22 May 2025 10:40 PM IST)
t-max-icont-min-icon

ராம் இந்திரா இயக்கத்தில் திரில்லர் பாணியில் 'மனிதர்கள்' படம் உருவாகியுள்ளது.

சென்னை,

ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மனிதர்கள்.மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மனிதர்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. யதார்த்த பாணியில் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பெண் காதபாத்திரமே கிடையாது.

ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் ராம் இந்திரா. படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டிரெய்லரை இயக்குநர் பா ரஞ்சித் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


மனதர்கள் படம் குறித்து இயக்குநர் ராம் இந்திரா " இது நண்பர்களின் உதவியால், கிரவுட் பண்டிங் முயற்சியில் உருவான திரைப்படம். மனிதனின் மனம் வித்தியாசமானது. நொடிக்கு நொடி மாறும் தன்மை கொண்டது. அதன் உணர்வுக்குவியல்களை திரையில் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்தப்படம்.ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்குள் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், ரசிகர்கள் ரசிக்கும் திரில்லராக உருவாக்கியுள்ளோம். இது முழுக்க இரவில் நடக்கும் கதை, இதுவரை திரையில் பார்த்த இரவாக இது இருக்காது. நீங்கள் நேரில் அனுபவிக்கும் இரவின் நிறத்தைத் திரையில் கொண்டு வந்துள்ளோம்" என்றார். இப்படம் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story