மணிகண்டன் நடித்துள்ள 'லவ்வர்' படத்தின் புதிய பாடல் வெளியீடு

'லவ்வர்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மணிகண்டன் நடித்துள்ள 'லவ்வர்' படத்தின் புதிய பாடல் வெளியீடு
Published on

சென்னை,

குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்த நடிகர் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. 'லவ்வர்' திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'ஆப்பிள் கிரம்பிள்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. பிரபுராம் வியாஸ், ஷான் ரோல்டன் எழுதியுள்ள இந்த பாடலை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com