மணிகண்டன் நடிக்கும் 'லவ்வர்' படத்தின் இரண்டாம் பாடல் வெளியானது...!

மணிகண்டன் நடித்துள்ள 'லவ்வர்' திரைப்படம் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.
மணிகண்டன் நடிக்கும் 'லவ்வர்' படத்தின் இரண்டாம் பாடல் வெளியானது...!
Published on

சென்னை,

குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்த நடிகர் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ ரசிகர்கள் இடையே வைரலானது.'லவ்வர்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இப்படத்தின் இரண்டாவது பாடலான 'தேன்சுடரே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com