மணிகண்டனின் “மக்கள் காவலன்” படத்தின் ரிலீஸ் அப்டேட்


மணிகண்டனின் “மக்கள் காவலன்” படத்தின் ரிலீஸ் அப்டேட்
x
தினத்தந்தி 23 Jan 2026 4:02 PM IST (Updated: 23 Jan 2026 4:04 PM IST)
t-max-icont-min-icon

சந்தோஷ் குமார் இயக்கத்தில் மணிகண்டன் நடித்த ‘மக்கள் காவலன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான மணிகண்டன் ‘பீட்சா 2’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். காலா, ஜெய் பீம், குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. ‘குட் நைட்’ படத்திற்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் ‘கோட்’ படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட விஜயகாந்திற்கு இவர்தான் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இவரது நடித்த ‘குடும்பஸ்தன்’ படம் வெளியாகி வெற்றிப்படமானது..

குடும்பஸ்தனைத் தொடர்ந்து, நீலம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் ‘மக்கள் காவலன்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சாதிய அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ‘மக்கள் காவலன்’ படத்தை மார்ச் மாதம் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் பர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, மணிகண்டன் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறார்.

1 More update

Next Story