ஹீரமண்டி: '12 மணி நேரம் தண்ணீரில் இருந்தேன்' - மனிஷா கொய்ராலா

ஹீரமண்டி சீரிஸில் நடித்தது குறித்து மனிஷா கொய்ராலா கூறினார்.
image courtecy:instagram@m_koirala
image courtecy:instagram@m_koirala
Published on

மும்பை,

பாலிவுட்டின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் தற்போது "ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்" என்ற சீரிஸை இயக்கியுள்ளார். இதில், சோனாக்சி சின்கா, மனிஷா கொய்ராலா, ஷர்மின் சீகல், ரிச்சா சத்தா, சஞ்சீதா ஷேக், அதிதி ராவ் மற்றும் பலர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

இது சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்களின் நிலை பற்றிய கதையம்சம் கொண்ட சீரிஸாக உருவாகி இருக்கிறது. இந்த சீரிஸ் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் ஹீரமண்டி சீரிஸில் நடித்தது குறித்து மனிஷா கொய்ராலா கூறினார். அவர் கூறியதாவது, 'ஹீரமண்டியில் அந்த ஒரு காட்சியில் நடிப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. அந்த காட்சிக்காக நான் 12 மணி நேரம் தண்ணீரில் இருந்தேன். தண்ணீர் சுத்தமாகவும் சூடாகவும் இருப்பதை இயக்குனர் உறுதிசெய்திருந்தாலும் சில மணி நேரத்தில் சேறும் சகதியுமாக மாறியது. இந்த காட்சியை எடுத்தபின் மிகவும் சோர்வடைந்தேன். எனக்கு அது மன அழுத்தத்தை கொடுத்தாலும் இதயபூர்வமாக சந்தோஷத்தை கொடுத்தது', இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com