மறைந்த தேவாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்திய “மஞ்சணத்தி” படக்குழுவினர்

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் நேற்று காலமானார்.
மறைந்த தேவாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்திய “மஞ்சணத்தி” படக்குழுவினர்
Published on: 

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் திருவுருவ படத்துக்கு ‘மஞ்சணத்தி’ படக்குழுவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75 வயது) நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இசை உலகிற்கு ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இறுதிஊர்வலம்

சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட தேவாவின் உடல் இறுதிச் சடங்குக்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான சக்கரமல்லூருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தேனிசைத் தென்றல் தேவாவின் உடல்அங்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இசை உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த தேவா மறைவுக்கு அரசியல், திரைப்பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் படக்குழுவினர், மறைந்த தேவாவின் திருவுருவப் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தி, ஆழ்ந்த இரங்கலையும் மரியாதையையும் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com