

சென்னை,
மஞ்சணத்தி "ஒரு வித்தியாசமான உலகம், ஒரு வித்தியாசமான பள்ளி, ஒரு வித்தியாசமான நான், வாழ்க்கையைச் சற்றே வித்தியாசமான கோணத்தில் பார்க்கக் கற்றுக்கொடுத்த ஒரு கதைசொல்லி” என்று பதிவிட்டுள்ளார்.
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை', 'பைசன் காளமாடன்' உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது தனது ஆறாவது படைப்பாக 'மஞ்சணத்தி'யை இயக்க உள்ளார்.
இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, இளையராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணி முதல் முறையாக இணைவதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது, மாரி செல்வராஜ் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் மூலம் ‘மஞ்சணத்தி’ என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். இதில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 7ம் தேதி தேனியில் தொடங்கியது. இளையராஜா - மாரி செல்வராஜ் இணையும் முதல் படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பை இளையராஜா கிளாப் போர்டு அடித்து தொடங்கி வைத்தார். ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன‘
இந்த நிலையில், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கயாடு லோஹர், இந்த படத்தின் தன்னுடைய செடியூல் நிறைவடைந்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், மஞ்சணத்தி "ஒரு வித்தியாசமான உலகம், ஒரு வித்தியாசமான பள்ளி, ஒரு வித்தியாசமான நான், வாழ்க்கையைச் சற்றே வித்தியாசமான கோணத்தில் பார்க்கக் கற்றுக்கொடுத்த ஒரு கதைசொல்லி” என்று பதிவிட்டுள்ளார்.