பிருதிவிராஜ் படத்தில் இருந்து விலகிய நடிகை மஞ்சு வாரியர்

பிருதிவிராஜ் படத்தில் இருந்து நடிகை மஞ்சு வாரியர் திடீரென விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிருதிவிராஜ் படத்தில் இருந்து விலகிய நடிகை மஞ்சு வாரியர்
Published on

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் மஞ்சு வாரியர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பிறகு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமாருடன் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் மலையாளத்தில் பிருதிவிராஜுடன் காப்பா என்ற படத்தில் நடிக்க மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தை வேணு இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. பட வேலைகள் தொடங்கிய நிலையில் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து வேணு விலகினார். எனவே அவருக்கு பதிலாக ஷாஜி கைலாஷ் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.

தற்போது இந்த படத்தில் இருந்து மஞ்சு வாரியரும் விலகி உள்ளார். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மஞ்சு வாரியர் எதற்காக விலகினார் என்பதற்கான காரணம் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com