ரஜினியுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்?

ரஜினியுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்?
Published on

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை முடித்து விட்டு 170-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் டைரக்டு செய்கிறார். இதுவும் ஜெய்பீம் படம் போன்று உண்மை சம்பவம் கதை என்றும், போலி என்கவுண்ட்டரை மையமாக வைத்து தயாராகிறது என்றும் கூறப்படுகிறது.

ரஜினி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல். இந்த படத்தில் ரஜினியுடன் நடிக்கும் இதர நடிகர்கள் விவரம் கசிந்துள்ளது. இதில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் நானி, மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் மஞ்சுவாரியர் ஆகியோரும் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது. ரஜினியுடன் நடிப்பது குறித்து மஞ்சுவாரியரிடம் படக்குழுவினர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். மஞ்சு வாரியர் ஏற்கனவே தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன், அஜித்குமாருடன் துணிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com