“வாழ” இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் “ஹேப்பிலூப்”

ஆனந்த் மேனன் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் ‘ஹேப்பி லூப்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.
“வாழ” இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் “ஹேப்பிலூப்”
Published on

மலையாள சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் 'அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன்' போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆர்யா, கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகி ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் சமீபத்தில் வெளியானது.

கடந்த 2024ல் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில், பெரிய அளவில் அறிமுகம் இல்லாத நடிகர்களைக் கொண்டு உருவான ‘வாழ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்திற்குத் தயாரிப்பாளரும் இயக்குனருமான விபின்தாஸ் கதை எழுதி இருந்தாலும், இப்படத்தை ஆனந்த் மேனன் என்பவர் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அவர் ‘ஹேப்பிலூப்’ என்கிற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் மஞ்சு வாரியாரின் சகோதரர் மது வாரியர் மற்றும் நடிகர் முகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com