‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் வெளியானது: அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய்யின் 'ஜனநாயகன்'பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாத நிலையில், மங்காத்தா ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சென்னை,
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா. அஜித்துடன் இணைந்து அர்ஜுன் முதல் முறையாக இப்படத்தில் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் என பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றிப்படமாக மங்காத்தா அமைந்து இருந்தது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு மங்காத்தா ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட இருப்பதாக சன்-பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. வரும் 23ஆம் தேதி ரீ-ரிலீஸாகும் இப்படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விஜய்யின் 'ஜனநாயகன்'பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாத நிலையில், மங்காத்தா ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






